அமைச்சு பதவிக்கு பச்சைக்கொடி காட்டினார் விக்கி!
Politics 1 வருடம் முன்
சர்வக்கட்சி அரசில் இணைந்து அமைச்சு பதவி ஏற்பது தொடர்பில் சாதகமாக பரீசிலிக்கத் தயார் - என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சர்வக்கட்சி அரசு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
" எனது கட்சி சார்பில், அரசிடம் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு சாதகமான பதில் கிடைத்தால், அமைச்சு பதவியை ஏற்பது குறித்தும் சாதகமாக பரீசிலிக்கப்படும். " - என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, விக்னேஸ்வரனின் அண்மைக்கால சில நகர்வுகள் தொடர்பில் அவருடன் கூட்டணி வைத்திருந்தவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
Related Posts