ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவு - மொட்டு கட்சி அறிவிப்பு

Politics 1 வருடம் முன்

banner

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுவர்தன தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவை அன்று நாம் விமர்சித்தோம். அரசியலில் ஒவ்வொரு காலத்திற்கு ஒவ்வொரு விடயம் குறிப்பிடப்படும், அன்று குறிப்பிட்ட விடயம் தொடர்பில் இன்று அவதானம் செலுத்த கூடாது. எனவே, அன்றைய விமர்சனம் இன்று எடுபடாது.

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்ததை தொடர்ந்து , அரசை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சி உட்பட சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

சவால்களை பொறுப்பேற்க எவரும் தைரியமாக முன்வராத நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வந்தார். சவால்களை வெற்றிக்கொள்ள சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுத்து, தற்போது அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியாக அவர் பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம்." - எனவும் அவர் குறிப்பிட்டார்.