" ராஜபக்ச ஆட்சியே நாட்டை நாசமாக்கியது"

banner

" ராஜபக்சக்களின் ஆட்சியே இந்த நாட்டை சீரழித்தது." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.





அத்துடன், நாட்டுக்காக பொது இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு தயார் எனவும், எனினும், அமைச்சு பதவிகளை ஏற்பதற்கு தயாரில்லை எனவும் அவர் கூறினார்.





" தற்காலிகமாக ஆளும் உரிமையே மக்களால் ராஜபக்சக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும், மக்கள் ஆணை நிரந்தரமாகக் கிடைத்துவிட்டது என எண்ணி, அவர்கள் செயற்பட்டனர். கொள்ளைகளில் ஈடுபட்டனர். மக்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால்தான் மக்களால் அந்த ஆட்சி விரட்டப்பட்டது.





தற்போது சர்வக்கட்சி அரசுக்காக அமைச்சு பதவி பேரம் பேசப்படுகின்றது. இந்த அரசியலுடன் எனக்கு உடன்பாடு இல்லை. பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியும், ஆனால் அமைச்சு பதவிகளை ஏற்கமுடியாது. " - எனவும் சஜித் குறிப்பிட்டார்.