பொலிஸ் வேடமிட்டு கொட்டாஞ்சேனையில் 'மெகா' கொள்ளை!

Politics 1 வருடம் முன்

banner

பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு ஆயுதங்களுடன் கொழும்பு - கொட்டாஞ்சேனை, பெனடிக் மாவத்தையிலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள் இருவர் , வீட்டு உரிமையாளரான பெண்ணை அச்சுறுத்தி இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

தனவந்த வர்த்தகருக்குச் சொந்தமான வீட்டில் 8 ஆம் திகதி காலை வர்த்தகரின் மனைவி மாத்திரமே இருந்துள்ளார். காலை 9. 30 மணி அளவில் வீட்டுக்கு வந்த இரு நபர்கள் , தாம் பொலிஸார் என கூறிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

பின்னர் வீட்டு உரிமையாளரான பெண்ணின் தலையில் பிஸ்டலை வைத்து கொலை செய்யபோவதாக அச்சுறுத்தி, அந்த வீட்டிலிருந்த ஒரு கோடியே 70 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளையும் 25 லட்சம் ரூபாவுக்கு அதிகமான பணத்தையும் கொள்ளை இட்டு சென்றுள்ளனர்.

கொட்டாஞ்சேனை பொலிஸார் சி.சி.டி.வி கெமரா காட்சிகள் மூலம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.