அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி

banner

" சர்வக்கட்சி அரசு என்ற போர்வையில் அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குற்றஞ்சாட்டினார்.





கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.





" நாட்டு மக்களின் பிரச்சினையை தீர்த்து, நாட்டை மீட்பதற்கான வியூகமாகவே சர்வக்கட்சி அரசு அமைய வேண்டும், ஆனால், அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நகர்வாகவே அது அமைந்துள்ளது. இந்நிலைமை மாற வேண்டும். பிரதி அமைச்சுகள் தேவையில்லை. குறுகிய அமைச்சரவை இருந்தால் போதும்." - எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.