'சர்வக்கட்சி அரசு' - மதில்மேல் பூனையாக சஜித் அணி!

banner

" சர்வக்கட்சி அரசுக்கு எந்த அடிப்படையில் ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.





ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது.





இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.





" சர்வக்கட்சி அரசுக்கான உத்தியோகப்பூர்வ அழைப்பு இன்னும் விடுக்கப்படவில்லை. எனினும், அமைச்சு பதவிகளை மட்டும் இலக்காகக்கொண்ட அரசாக, அது அமையக்கூடாது, நாம் அமைச்சு பதவிகளை பெறபோவதும் இல்லை.





எனினும், சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். அரசின் நடவடிக்கையில் வெளிப்படைதன்மை இருந்தால் மாத்திரமே அந்த ஒத்துழைப்பு வழங்கப்படும். தற்போதுவரை அந்த வெளிப்படை தன்மையை காணமுடியவில்லை. நாமும் இறுதி முடிவை எடுக்கவில்லை." - எனவும் கிரியல்ல குறிப்பிட்டார்.