நாமலுக்கு பதவி வழங்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம்!

Politics 1 வருடம் முன்

banner

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





சர்வக்கட்சி அரசு அமைந்தால்கூட , நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சரவையில் கட்டாயம் இடமளிக்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.





ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச அமைச்சரவைப் பட்டியலில், நாமல் ராஜபக்சவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.





இது விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவிக்குமாறு மொட்டு கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.