மொட்டு கட்சி ஆசியுடன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில்!

Politics 1 வருடம் முன்

banner

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியில் போட்டியிட தயாராகி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.





இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றாலும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.





ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ​​அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.





இந்த கோரிக்கை தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரிடம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவர்கள் இறுதித் தீர்மானத்தை இன்னும் அறிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.





ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியில் இருந்த பல கட்சிகள் தற்போது அக்கட்சியில் இருந்து விலகியதால், புதிய கட்சிகளை ஒன்றிணைத்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது குறித்து சில உள்ளகக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.