கோட்டாவை விரட்டியது மாபெரும் தவறாம் - மஹிந்த வக்காலத்து!

Politics 1 வருடம் முன்

banner
" கோட்டாபய ராஜபக்ச போன்ற ஒரு அரச தலைவரை வரலாற்றில் இனி கண்டுபிடிக்க முடியாமல்போகும். கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தியவர்கள் அது தொடர்பில் கவலையடையும் காலம் வரும்."


இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,


" அரசாங்க நிதியில் இருந்து ஒரு சதம்கூட களவாடாத தலைவர்தான் கோட்டாபய ராஜபக்ச. அவரது ஆட்சி காலத்தில் பாதாள குழு வெளியில் தலைகாட்டவில்லை. போராட்டக்களை ஒடுக்க கண்ணீர் புகை, தடியடி தாக்குதல் நடத்தவில்லை. ஜனாதிபதிக்கான செலவீனங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.


இப்படியானதொரு அரச தலைவரை இனி கண்டுபிடிப்பது கடினம். கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தியவர்கள், அந்த முடிவு தொடர்பில் மரணிக்கும் தருவாயிலாவது கவலை அடைவார்கள்.


கோட்டாபய ராஜபக்ச அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார். இனி அரசியலுக்குள் வரும் எண்ணம் அவருக்கு இல்லை." - என்றார்.