தேசிய பேரவையை புறக்கணித்தது தமிழ்க் கூட்டமைப்பு!

banner
தேசியக் கொள்கைகளை வகுப்பதற்கான 'தேசிய பேரவை' எனப்படும் நாடாளுமன்றக்குழுவுக்கு 32 உறுப்பினர்கள் பெயர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.  எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி உட்பட நான்கு கட்சிகள் அதில் அங்கம் வகிக்கவில்லை.


நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.


இதன்போதே தேசிய பேரவையில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர் விவரத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன , சபைக்கு அறிவித்தார்.


சபாநாயகர் தலைமையிலான தேசிய பேரவையில்,  பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர்,  சபை முதல்வர், ஆளுங்கட்சி பிரதம கொறடா ஆகியோர் பதவி நிலை உறுப்பினர்களாவர்.


ஏனைய உறுப்பினர்கள் கட்சிகளின் அடிப்படையில் தெரிவாவார்கள்.

அந்தவகையில்,


டக்ளஸ் தேவானந்தா,

நஸீர் அஹமட்,

டிரான் அலஸ்,

சிசிர ஜெயகொடி,

சிவநேசத்துரை சந்திரகாந்தன்,

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ,

ரவூப் ஹக்கீம்,

பவித்ரா வன்னியாராச்சி,

வஜிர அபேவர்த்தன,

ஏ.எல்.எம் அத்தாவுல்லாஹ்,

திஸ்ஸ விதாரன,

ரிசாத் பதியுதீன்,

விமல் வீரவன்ச,

வாசுதேவ நாணயக்கார,

பழனி திகாம்பரம்,

மனோ கணேசன்,

உதய கம்மன்பில,

ரோஹித்த அபேகுணவர்த்தன,

நாமல் ராஜபக்ச,

ஜீவன் தொண்டமான்,

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

அத்துரலியே ரத்தன தேரர்,

அசங்க நவரட்ன,

அலி சப்ரி ரஹீம்,

சி.வி விக்னேஸ்வரன்,

வீரசுமன வீரசிங்க,

சாகர காரியவசம்,


ஆகியோர் நேற்று பெயரிடப்பட்டனர்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,  டலஸ் ஆதரவு அணிகள் தேசிய சபைக்கு தமது உறுப்பினர்களை பெயரிடவில்லை.  தேசிய சபைக்கு 35 உறுப்பினர்களை விஞ்ஞாத வகையில் நியமனம் இடம்பெறலாம்.