தேசியப் பேரவையில் பஸிலின் உளவாளிகள் - சுதந்திரக்கட்சி பகீர் தகவல்

Politics 1 வருடம் முன்

banner
" தேசியப் பேரவை என்பது முக்கியத்துவம்மிக்க சபையாகும். எனினும், பஸிலுக்கு விசுவாசமானவர்களே அதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டினார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கேகாலை மாவட்ட செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" நாடு இனி இல்லையென்றளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில்கூட கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயற்படுகின்றது ஆளுங்கட்சி.

இந்நிலையில் மேலும் சில அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதன்படி இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும், அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும் அதிரிக்கப்படவுள்ளது. அமைச்சரொருவருக்கு மாதம் 25 லட்சம் ரூபா செலவளிக்கப்படுகின்றது. எனவே, எதற்காக இந்தளவு அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்?

அதேவேளை, தேசிய சபைக்கு கல்வி அறிவுள்ளவர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும். ஏனெனில் நாடு தொடர்பில் தீர்மானம் எடுக்கும் முக்கிய கட்டமைப்பு அது. ஆனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் 8 ஆம் ஆண்டுகூட சித்தியடையாதவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பஸில் ராஜபக்சவின் கட்டளையின் படி செயற்படுபவர்கள்." " - என்றார்.