கோட்டாவுக்கு ஆலோசகர் பதவி?

banner
தாய்லாந்திலிருந்து நாடு திரும்பி, தற்போது ஓய்வில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை, மொட்டு கட்சி செயற்பாட்டாளர்கள் சந்தித்து, சுகநலம் விசாரித்துவருகின்றனர். முக்கியமான வியாபாரிகளும் நாளாந்தம் கோட்டாவின் வீடு நோக்கி வந்தவண்ணமுள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், தனது குடும்பம் சகிதம் இரண்டாவது தடவையாக தம்பி கோட்டாபயவை சந்திப்பதற்கு சென்றுள்ளார். மருமகள்மார், பேரக்குழந்தைகளும் இருந்துள்ளனர்.

அவர்களுக்காக விசேட இரா போசனத்தை கோட்டா ஏற்பாடு செய்துள்ளார். பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சி பேசியது மட்டுமல்லாமல், மனம் விட்டு பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்ல மஹிந்த ராஜபக்சவுடன் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

செயற்பாட்டு அரசியலுக்கு மீண்டும் வரும் எண்ணம் இல்லை என்ற போதிலும், திரைமறைவு அரசியலை முன்னெடுப்பதற்கு கோட்டாபய ராஜபக்ச தயார் நிலையில் இருப்பதாக தகவல். இதற்காக மொட்டு கட்சி மாநாட்டின்போது அவருக்கு ஆலோசகர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதென அறியமுடிகின்றது.