கோதுமை மா விலையை குறைக்க நடவடிக்கை!

Politics 1 வருடம் முன்

banner
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த கோதுமை மா துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் இரண்டு வாரங்களில் 250 ரூபா விலையில் கோதுமை மாவை பெற்றுக் கொடுக்க முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நூறு கொள்கலன்களில் கோதுமை மா துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் இரண்டு வாரங்களுக்குள் அதனை தட்டுப்பாடின்றி குறைந்த விலையில் சந்தைக்குப் பெற்று கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

" கோதுமை மாவுக்கு நெருக்கடி காணப்படுகிறது. அதற்குக் காரணம் தேசிய ரீதியில் இரண்டு நிறுவனங்கள் மாத்திரமே 99 வீதமான கோதுமை மாவை உற்பத்தி செய்கின்றன.

அதேவேளை, இந்தியாவிலிருந்தே நூற்றுக்கு 90 வீதமான கோதுமை மா நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. எனினும் தற்போது இந்திய அரசாங்கம் கோதுமை மா இறக்குமதிக்கு தடை விதித்துள்ளதால் நாம் துபாய் மற்றும் துருக்கி நாடுகளில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்." - எனவும் அவர் குறிப்பிட்டார்.