இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்தது ஏன்? வெளியான பகீர் தகவல்!

Politics 1 வருடம் முன்

banner
" நாடாளுமன்றத்தல் உள்ள குழுக்களின் தலைமைப்பதவி எதிரணிகளுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டிருந்தால் நாடு வங்குரோத்து நிலையை நோக்கி செல்வதை தடுத்திருக்கலாம்." - என்று எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர். அவ்வேளையிலேயே எதிரணி பிரதம கொறடாவான கிரியல்ல இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

" கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப்பதவி எதிரணி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவில் இணக்கம் எட்டப்பட்டிருந்தது. சபாநாயகரும் இந்த உறுதிமொழியை வழங்கினார். ஆனால் இன்னும் அது நடக்கவில்லை.

வளர்ச்சியடைந்த நாடுகளில், நாடாளுமன்ற முறையில் நாடாளுமன்ற குழுக்களின் தலைமைப்பதவி எதிரணிக்கே வழங்கப்படும். இதுதான் நாட்டுக்கும் நல்லது.

இற்றைக்கு இரு வருடங்களுக்கு நிதி தொடர்பான குழுவின் தலைமைப்பதவியை கோரினோம். வழங்கப்படவில்லை. அவ்வாறு வழங்கியிருந்தால், இரண்டு வருடங்களுக்கு முன்னரே, நாடு வங்குரோத்து நிலையை நோக்கி பயணிக்கின்றது என எச்சரித்திருப்போம். உரிய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். " - என்றார்.