'ஜெனிவாவில் பின்னடைவு ஏற்படும்' - ஒப்புக்கொண்டது இலங்கை!

Politics 1 வருடம் முன்

banner
" மனித உரிமை விவகாரத்தை ஆயுதமாக பயன்படுத்தி இலங்கையைக் கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சி இடம்பெறுகின்றது. இதன் பின்னணியில் இரு நாடுகளே தீவிரமாக செயற்படுகின்றன. எது எப்படி இருந்தாலும் ஜெனிவா தீர்மானத்தை ஏற்கமுடியாது." - என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

ஜெனிவாவில் இருந்து நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

" தேசியப் பொறிமுறை ஊடாக தீர்வைக் காண்பதற்கு முற்பட்டாலும் அது தொடர்பில் திருப்திக்கொள்ளும் நிலைப்பாட்டில் சில தரப்புகள் இல்லை. கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் புலம்பெயர் இலங்கையர்கள் இது விடயத்தில் தீவிரமாக செயற்படுகின்றனர். தமது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. தொடர்ச்சியாக புதிய, புதிய பிரேரணைகள் முன்வைக்கப்படுகின்றன.

ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் உள்ள 8 ஆவது சரத்து, எமது நாட்டு படையினருக்கு அச்சுறுத்தலானது, வெளிநாட்டில் வழக்கு தொடுத்து, விசாரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இதனை ஏற்கவில்லை. அது எமது நாட்டு அரசமைப்புக்கு முரணானது. நாம் ஏற்றால்கூட, எமது நாட்டு நீதிமன்ற கட்டமைப்பு அதற்கு இடமளிக்காது. உள்ளக பொறிமுறையே எமது ஏற்பாடு, வெளியக பொறிமுறையை ஏற்க மாட்டோம்." - எனவும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி குறிப்பிட்டார்.