ஜெனிவா தீர்மானம் வடக்கையும், தெற்கையும் துருவப்படுத்தும்!

Politics 1 வருடம் முன்

banner
" ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கோட்பாடுகளுக்கு மாறாக, வடக்கு – தெற்கை துருவப்படுத்தும் – அரசியல் மயமாக்கலுக்கு இந்தத் தீர்மானம் மற்றோர் உதாரணம் என்பதை வாக்கெடுப்பு முடிவு நிரூபிக்கின்றது.”

– இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றியபோதே வெளிவிவகார அமைச்சர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நல்லிணக்கம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கையின் தொடர்ச்சியான ஆக்கபூர்வமான ஈடுபாடு ஆகியவற்றில் உள்நாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், மீண்டும் ஒருமுறை இலங்கை தொடர்பான தீர்மான வரைவு சமர்ப்பிக்கப்பட்டமை வருத்தமளிக்கின்றது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒரு விரிவான தேசிய பாதுகாப்பு சட்டத்துடன் உள்நாட்டில் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக, ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைக்காக இலங்கை காத்திருக்கின்றது.

உள்நாட்டு உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நிறுவுவது முன்னேற்றகரமான கலந்துரையாடலில் உள்ளது.

இந்நிலையில், இந்தத் தீர்மானமானது அனுசரணையாளர்களின் அரசியல் கருத்துக்களை முன்வைக்கும் நோக்கத்தை பூர்த்தி செய்யக் கூடியதாக இருந்தாலும், அது இலங்கைக்கு வெளிப்படையாக உதவாது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் உருவாக்கிய வெளிப்புற ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையை நீட்டிக்கவும் வலுப்படுத்தவும் முயலும், குறிப்பாகச் செயற்பாட்டு பத்தி (OP) 8 இல் உள்ள முன்மொழிவையும் இலங்கை எதிர்க்கின்றது” – என்றார்.