ColomboPoliticsSri Lanka

புலிகளை நினைவுகூர ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது!

“ போரில் உயிரிழந்த தமது உறவுகளை மக்கள் நினைவுகூரலாம். ஆனால் புலிகளை நினைவுகூருவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.” – என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளருக்கு விசா வழங்கப்பட்டமை நல்ல விடயமாகும். எமக்கு ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை. விசா வழங்கி இருக்காவிட்டால்தான் அது பிரச்சினையாக மாறி இருக்கும்.

முள்ளிவாய்க்கால் சென்றிருந்தேன், நினைவேந்தல் நடத்தும் சுதந்திரம் இருந்தது, பொலிஸார், இராணுவத்தினர் இருக்கவில்லை என அவர் (சர்வதேச மன்னிப்பு சபை செயலாளர்) குறிப்பிட்டிருந்தார். அனுமதி வழங்கி இருக்காவிட்டால் நினைவேந்தல் சுதந்திரம்கூட இல்லை என்ற கோணத்தில் பிரசாரம் இடம்பெற்றிருக்கும்.

உயிரிழந்தவர்களை நினைவுகூரும் உரிமை உள்ளது, ஆனால் புலிகளை நினைவுகூரும் உரிமை கிடையாது. இதனை சர்வதேச மன்னிப்பு சபை செயலாளரிடமும் கூறினோம்.” – என்றார்.

Related Articles

Back to top button