PoliticsWorld

போர் நிறுத்தத்துக்கு பச்சைக்கொடி காட்டியுள்ள புடின்

உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சு நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி புடின், பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் சூழலில், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அமைதி பேச்சுகளை வலியுறுத்தி வருகிறன.

ஜி-7 உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் இணக்கம் தெரிவித்துள்ளார்.ஆனால், ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டும், நேட்டோவில் சேருவதற்கான திட்டத்தை கைவிட வேண்டுமென ரஷ்யா ஜனாதிபதி நிபந்தனைகளை விதித்துள்ளார்.

நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் உடனடியாக போரை நிறுத்துவதுடன், அமைதி பேச்சுகளில் ஈடுபட தயார்.” எனவும் புடின் கூறியுள்ளார்.

உக்ரைனில் அமைதி ஏற்படுத்துவதற்காக சுவிட்சர்லாந்தில் உலகத் தலைவர்கள் சந்தித்து பேசவுள்ள நிலையில், புடின் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளது.

 

Related Articles

Back to top button