AustraliaMain NewsPolitics

முடிவுக்கு வருமா பீஜிங் – கன்பரா உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்?

ஆஸ்திரேலியா மற்றும் சீன உறவுகளில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலை முடிவுக்கு வந்துவிட்டது என தான் நம்புவதாக சீன பிரதமர் அறிவித்துள்ளார். எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலை இன்னும் முழுமையாக தணியவில்லை என ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

7 ஆண்டுகளுக்கு பிறகு சீன பிரதமர் ஒருவர் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நான்கு நாட்கள் பயணமாக வந்துள்ள அவர், முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

இந்நிலையில் சீன பிரதமரின் வருகையை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் வரவேற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியுடனான உறவை இவ்விஜயம் பலப்படுத்தும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பசுபிக் பிராந்தியத்தில் சீனா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டி தொடர்பிலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, உக்ரைன், ரஸ்ய மோதலை முடிவுக்குகொண்டுவருவதற்கு சீனா தலையிட வேண்டும் எனவும், ஐ.நா. பாதுகாப்பு சபையில் உள்ள வீட்டோ அதிகாரத்தை முறையாக பயன்படுத்த வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button