AustraliaMain NewsPolitics

பூர்வக்குடி மக்கள் செறிந்து வாழும் Alice Springs பகுதியில் மீண்டும் ஊரடங்கு!

Northern Territory பிராந்தியத்தில் பூர்வக்குடி மக்கள் செறிந்து வாழும் Alice Springs பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஊடரங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என பிராந்திய பொலிஸ் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்கள் பதிவானதையடுத்தே Alice Springs பகுதியில் இவ்வாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

20 பேரடங்கிய இளைஞர்கள் குழுவொன்றால் பொலிஸ் அதிகாரிகள்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின் பிரகாரம் 72 மணிநேரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் பொலிஸ் ஆணையாளருக்கு உள்ளது.

அதேவேளை, சில மாதங்களுக்கு முன்னரும் வன்முறைச் சம்பவத்தையடுத்து Alice Springs பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை அறிந்ததே.

Related Articles

Back to top button