CommunityPolitics

20 வயது யுவதி குத்திக்கொலை: மேற்கு சிட்னியில் பயங்கரம்!

மேற்கு சிட்னியில் 20 வயது யுவதியொருவர் கத்திக்குத்து தாக்குதலில் பலியாகியுள்ளார்.

கிங்ஸ்வூட் நகர் பகுதியில் இன்று பிற்பகல் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது என அவசர சேவை பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

20 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் மார்பு பகுதியில் கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது. அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டாலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

அவர் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை.
சம்பவத்தையடுத்து அப்பகுதியில் இருந்து 22 வயது இளைஞர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Related Articles

Back to top button