AustraliaMain NewsPolitics

Alice Springs பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு அவசியம்!

Alice Springs மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு அவசியம் எனவும், இது விடயத்தில் அரசியலை உட்புகுத்த கூடாது எனவும் பூர்வக்குடி மக்கள் தொடர்பான அமைச்சர் Linda Burney தெரிவித்தார்.

Alice Springs  பகுதியில் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு அமுலில் உள்ளது.

80 பேர் கொண்ட கும்பல் வன்முறையில் ஈடுபட்டமை, 42 வயதான பெண்மீது கத்திக்குத்து தாக்குதல் உட்பட சில வன்முறைச் சம்பவங்கள் பதிவான நிலையிலேயே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே Alice Springs பகுதி மக்களை பாதிக்கும் சிக்கல்களைத்தீர்க்க நீண்ட கால தீர்வுகள் மட்டுமே ஒரே வழியென அமைச்சர் Linda Burney  சுட்டிக்காட்டியுள்ளார். நீண்டகால நிதி உறுதிப்பாடு அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button