AustraliaPolitics

குழந்தைகள் வைத்தியசாலைமீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: ஆஸி. கடும் கண்டனம்

உக்ரைனியில் உள்ள குழந்தைகள் வைத்தியசாலைமீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இத்தாக்குதலை ஆஸ்திரேலியா வன்மையாகக் கண்டித்துள்ளது.

ரஷ்யாவின் சட்டவிரோத போர் முடிவுக்குவர வேண்டும் எனவும், உக்ரைனுக்கான ஆதரவு தொடரும் எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளார்.

உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 865 நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ், டினிப்ரோ, கிர்வி ரிஹ், சுலோவன்ஸ்க், கர்மட்ரோஸ் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

தலைநகர் கீவ்வில் உள்ள குழந்தைகள் வைத்தியசாலை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும், 171 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button