AustraliaPolitics

44 அகதிகளை திருப்பி அனுப்பியது ஆஸி.!

படகுமூலம் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 44 அகதிகள் எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, இரு படகுகளில் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியா ஜாவாவில் இருந்து கடந்த ஜுன் மாதம் இவர்கள் ஆஸ்திரேலியா வர முற்பட்டுள்ளனர். எனினும், ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சுமார் 18 நாட்கள்வரை அவர்கள் கப்பலிலேயே தடுத்து வைக்கப்பட்டனர் எனவும், அதன்பின்னர் இரு படகுகளில் திருப்பி அனுப்பட்டுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

பங்களாதேஷே சேர்ந்தவர்களே குறித்த அகதிகளுள் அதிகம் இருந்துள்ளனர்.
மீன்பிடி படகுகள் மூலமே இவர்கள் ஆஸ்திரேலிய எல்லையை அடைய முற்பட்டுள்ளனர்.

மலேசியாவில் இருந்து விமானம்மூலம் இந்தோனேசியா சென்று, அங்கிருந்தே படகுமூலம் ஆஸ்திரேலியா நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே அவர்கள் இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button