AustraliaPolitics

நேட்டோவுடனான உறவை வலுப்படுத்த ஆஸ்திரேலியா திட்டம்

நேட்டோ அமைப்புடனான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் Richard Marles தெரிவித்தார்.

நேட்டோ அமைப்பின் 75 ஆவது உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றுவருகின்றது.

நேட்டோவில் ஆஸ்திரேலியா அங்கம் வகிக்காவிட்டாலும் அவ்வமைப்புடன் உறவை பேணிவருகின்றது.

இதனால் நேட்டோவின் மாநாட்டுக்கு ஆஸ்திரேலியாவும் அழைக்கப்படுவது வழமை.

அந்தவகையிலேயே இம்முறை குறித்த மாநாட்டில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் Richard Marles பங்கேற்றுள்ளார். அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளிலும் ஈடுபட்டுவருகின்றார்.

அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், தனது உடலுறுதியை நிரூபிக்கும் வகையில் நேட்டோ மாநாட்டின் தொடக்கத்தில் அவர் ஆக்ரோஷமாக உரையாற்றியமை அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

Back to top button