வெளிநாடுகளுக்குரிய நிதி உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ள நிலையில், பசுபிக் தீவு நாடுகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு ஆஸ்திரேலியா தயாராகிவருகின்றது.
கூட்டாட்சி அரசின் வரவு- செலவுத் திட்டம் நேற்று முன்வைக்கப்பட்டது. இதில் மேற்படி விடயத்துக்குரிய நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளிநாட்டுக்குரிய உதவிகளை மட்டுப்படுத்துவதால் பாதிக்கப்படும் பசுபிக் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள்மீது ஆஸ்திரேலியா கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய பப்புவா நியூ கினியா, பிஜி மற்றும் பிலிப்பைன்ஸில் எச்.ஐ.வி தடுப்பு திட்டங்களை முன்னெடுக்க 5 மில்லியன் டொலர்கள் உட்பட சுகாதார சேவை, காலநிலை மாற்றம் உள்ளிட்ட விடயங்களுக்காக 119 மில்லியன் டொலர்களை ஆஸ்திரேலியா வழங்கவுள்ளது.
இந்தோனேசியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலியா உதவவுள்ளது.