சிட்னி தெற்கிலுள்ள வைத்தியசாலையொன்றில் யூத எதிர்ப்பு கருத்து தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரையும் தேடிவருகின்றனர்.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி வைத்தியசாலையின் லிப்ட்டுக்குள் நபரொருவர் நுழைந்துள்ளார். இதன்போது லிப்டுக்குள் இருந்த நபரொருவரை நோக்கி யூத எதிர்ப்பு கருத்துகளை முன்வைத்தள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டிய நபரின் படத்தை விக்டோரிய மாநில பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.