ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து புறநகர் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளத்தில் சிக்கி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்திருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகளே இவ்வாறு இறந்துள்ளன.
முதன்மை தொழில்துறை திணைக்களத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 348 கால்நடைகள் உயிரிழந்திருக்கக்கூடும் அல்லது காணாமல்போயுள்ளன என கணிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்தில் 27 லட்சம் செம்மறி ஆடுகள், 7 லட்சத்து 13 ஆயிரம் ஆடுகள் உட்பட 13.3 மில்லியன் கால்நடைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் 4 ஆயிரம் கிலோ மீற்றருக்கு மேற்பட்ட வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கால்நடைகளின் உயிரிழப்பு மற்றும் வீதி, வேலிகளின் பாதிப்பு மேலும் அதிகரிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.