வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தனது மூன்று பிள்ளைகள்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தாய், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.
சிட்னி வடமேற்கு பகுதியிலுள்ள வீடொன்றிலேயே நேற்று அதிகாலை இப்பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
10 வயது மகன், 13 மற்றும் 16 வயதுடைய மகள்கள்மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு தாக்குதல் நடத்திவிட்டு 47 வயதான குறித்த பெண் தன்னை தானே வெட்டியும் கொன்றுள்ளார்.
பொலிஸாரின் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அவர் பரமட்டா நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டார். இதன்போது பிணை மறுக்கப்பட்டது. அடுத்தக்கட்ட வழக்கு விசாரணை மே 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.