ரொக்க வட்டி வீதத்தை 4.1 வீதமாக ஆஸ்திரேலிய மத்திய வங்கி தக்கவைத்துக்கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய மத்திய வங்கியின் கூட்டம் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற நிலையில், உரிய மீளாய்வுகளின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் வட்டி விகிதமும் பேசு பொருளாக உள்ளது.
இவ்வாறானதொரு நிலையிலேயே வட்டி வீதம் அதிகரிக்கப்படாமல், அதே வீதத்தில் தக்கவைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பணவீக்கம் இலக்கை நோக்கி திரும்பி வருவதால் அடுத்த கூட்டத்தின்போது வட்டி வீதம் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், வர்த்தக போரை தொடுத்துள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்படும் பொருளாதார ரீதியிலான தாக்கங்கள் தொடர்பிலும் மத்திய வங்கி அவதானம் செலுத்தியுள்ளது.
ட்ரம்பின் பொருளாதார மற்றும் வரி அணுகுமுறைகள் தொடர்பில் ஆஸ்திரேலிய மத்திய வங்கி கவலை வெளியிட்டுள்ளார்.