அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தகப் போரையடுத்து ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், ஆளுங்கட்சியான லேபர் கட்சி முன்னிலை வகிக்கின்றது.
எதிர்வரும் மே 3 ஆம் திகதி கூட்டாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போதைய சூழ்நிலையில், தனி பெரும்பான்மையுடன் லேபர் கட்சி ஆட்சியை தக்கவைத்தக்கொள்ளும் என தெரியவந்துள்ளது.
கருத்து கணிப்பாளர் ராய் மோர்க்கன் என்பவரால் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளின் அடிப்படையிலேயே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
இரு கட்சிகளின் விருப்பு வாக்கு அடிப்படையில் லேபர் கட்சியின் வாக்கு வங்கியானது 0.5 வீதத்தால் அதிகரித்து 53.5 வீதமாக காணப்படுகின்றது. லிபரல் கூட்டணியின் வாக்கு வங்கி 0.5 வீதத்தால் குறைவடைந்து 46.5 வீதமாக காணப்படுகின்றது.
எனினும், நாடு சரியான திசையில் செல்கின்றது என 33 சதவீதமானோரே நம்புகின்றனர். 52 சதவீதமானோர் அவ்வாறு நம்பவில்லை என்பதும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.