குயின்ஸ்லாந்து, சன்ஷைன் கடற்கரையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.
நேற்று மதியவேளையிலேயே 49 மற்றும் 82 வயதுடைய இரு ஆண்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 49 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் மகன் எனவும், தாக்கியவர் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.
82 வயதான தந்தை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு ஆயுதம் பயன்படுத்தப்படவில்லை. எனினும், உயிரிழப்பு ஏற்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.