சர்வதேச விமான பயணத்தின்போது பெண் பயணி ஒருவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட அமெரிக்க பிரஜையொருவர், ஆஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மற்றும் நேபாள நாட்டில் இரட்டை குடியுரிமை கொண்ட 67 வயது நபரொருவரே இவ்வாறு அநாகரீகமாக நடந்துகொண்டார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சிட்னி நோக்கி வந்த விமானத்திலேயே அவர் இவ்வாறு செயற்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பெடரல் பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விமான பணியாளர்களிடமும் இது பற்றி வினவப்பட்டுள்ளது.
குறித்த நபரை சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்துவதற்கு நடவடிக்கை ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஏழு ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.