மெல்பேர்ண் கிழக்கு பகுதியில் நபரொருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை வேட்டை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
நேற்றிரவு 11 மணியளவிலேயே இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது என விக்டோரிய பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்தவேளை நபரொருவர் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். அவர் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை.
இக்கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.