கூட்டாட்சி தேர்தலில் லேபர் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தால் வெளிவிவகாரக் கொள்கையில் முக்கிய இரு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று லேபர் கட்சி ஆதரவாளர்கள் வலியுறுத்திவருகின்றது.
பாலஸ்தீனத்துக்கு சார்பான லேபர் கட்சி ஆதரவாளர்களாலேயே இந்த வலியுறுத்தல் விடுக்கப்படுகின்றது.
இதற்கமைய இஸ்ரேல்மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் எனவும், அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், இது விடயத்தில் மேற்படி கோரிக்கைகளை ஏற்பதற்கு லேபர் கட்சி தயாரில்லை என தெரியவருகின்றது. இதனால் அக்கட்சிக்குரிய ஆதரவு அலை குறையக்கூடும் எனக் கூறப்படுகின்றது.
அதேவேளை, பாலஸ்தீன விவகாரமானது லேபர் அரசாங்கத்துக்கு தேர்தலுக்கு முன்னரும் பெரும் தலையிடியாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பிரச்சினையாலேயே செனட்டர் பாத்திமா பேமன்கூட கட்சியைவிட்டு வெளியேற நேரிட்டது.