தெற்கு நியூ சவூத் வேல்ஸிலுள்ள கிராமபுறமொன்றில் ஆறு கழுகுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
ஆறு குழுகுகள் இறந்த நிலையில் காணப்பட்டன. மேலும் ஒரு கழுகு காயமடைந்திருந்தது. எனினும், அது கருணை கொலை செய்யப்பட வேண்டிய கட்டாய நிலையில் இருந்தது.
ஆப்பு போன்ற வால் கொண்ட கழுகு இனமானது ஆஸ்திரேலியாவில் பாதுகாக்கப்பட வேண்டிய பறவை இனமாகும்.
எனவே, குறித்த கழுகை சுடுவது அல்லது கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். 50 ஆயிரம் டொலர்கள்வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் ஈராண்டுகள்வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.