அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போருக்கு எதிராக அணிதிரண்டுள்ள நாடுகளுடன் ஆஸ்திரேலியாவும் இணைய வேண்டுமென சீனா விடுத்துள்ள அழைப்பை ஆஸ்திரேலியா அடியோடு நிராகரித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கான சீனத் தூதுவரால் விடுக்கப்பட்ட இந்த அழைப்பை பாதுகாப்பு அமைச்சரும், துணை பிரதமருமான் ரிச்சர்ட் மார்லஸ் இவ்வாறு நிராகரித்துள்ளார்.
ஆஸ்திரேலியா தனது வர்த்தகத்தை மேம்படுத்துவதன் மூலமும், சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் ஊடாகவும் தனது சொந்த நலன்களைப் பின்பற்றும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக நாடுகள்மீது ட்ரம்ப் வரிகளை விதித்தாலும் சீனாமீது கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சீனாவும் பதிலடி கொடுத்துவருகின்றது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் உக்கிரமடைந்துள்ளது.
இந்நிலையிலேயே சீனாவுக்கு எதிராக அணிதிரளுமாறு ஆஸ்திரேலியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்தோனேசியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துடன் ஆஸ்திரேலியா வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் எனவும் துணை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.