உலகில் பலம்பொருந்திய இரு நாடுகளுக்கிடையில் வர்த்தகப்போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், அதனால் ஏற்படும் தாக்கங்களில் இருந்து மீள்வதற்குரிய வழிமுறைகள் தொடர்பில் ஆஸ்திரேலியா திவிர கவனம் செலுத்திவருகின்றது.
இந்நிலையில் சீனாதவிர ஏனைய நாடுகளுக்குரிய பரஸ்பர வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 90 நாட்கள் ஒத்திவைத்துள்ளதால், ஆஸ்திரேலிய பங்கு சந்தை சற்று ஏற்றம் கண்டுள்ளது.
ட்ரம்பின் வரி விதிப்பால் கடந்த வாரம் ஆஸ்திரேலிய பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்திருந்த நிலையிலேயே தற்போது சற்று மேம்பட்டுள்ளது.
மேற்படி 90 நாள் காலப்பகுதிக்குள் 10 சதவீத வரி அமுலில் இருக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு ஏற்கனவே 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதால் 90 நாட்கள் நிவாரணம் ஆஸிக்கு கிட்டாது. எனினும், பங்கு சந்தை நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளது.
அதேவேளை, சீனா உலக சந்தைகளுக்கு காட்டிய மரியாதையின்மையின் காரணமாக, அந்நாட்டுக்கு அமெரிக்கா விதிக்கும் வரி 125 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.