17 கிலோ ஐஸ் போதைப்பொருளை ஆஸ்திரேலியாவுக்கு கடத்திய அமெரிக்க பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சன் பிரான்ஸிக்கோவிலிருந்து சிட்னி விமான நிலையத்துக்கு குறித்த பெண் வந்துள்ளார்.
தனது பையை கண்டுபிடிக்க முடியவில்லை என விமான நிலையை அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாணைகளிலேயே அவர் சூட்சேஸொன்றில் ஐஸ் போதைப்பொருள் கடத்திவந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவரிடம், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இக்குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடும் என தெரியவருகின்றது.