தனது தாயை கிரிக்கெட் துடுப்பு மட்டையால் தாக்கியும், குத்தியும் கொடூரமாக கொலை செய்த மகனுக்கு விக்டோரியா உயர் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
17 வயதான சிறுவன் ஒருவனே 2023 ஏப்ரல் மாதம் 41 வயதான தனது தாயை இவ்வாறு கொலை செய்துள்ளார்.
தனது தாய் துடிப்படை கண்ட அவரின் 15 வயதான இளைய மகன், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதற்கிடையில் தாயை கொன்ற மகன், காரொன்றில் தப்பிச்சென்றுள்ளார்.
பொலிஸார் சம்பவ இடத்துக்குவரும்வேளை தாய் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டார். தனது மூத்த மகனே இந்த செயலை செய்துள்ளதாக அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கினார். பிறகு அவர் உயிரிழந்தார்.
தப்பிச்சென்ற மகன் ஏப்ரல் 04 ஆம் திகதி விக்டோரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மத ரீதியிலான மூட நம்பிக்கையில் குறித்த சிறுவன் இருந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
அவரின் வயதைக்கருத்திற்கொண்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் பிணைக்கு விண்ணப்பிக்க முடியும்.