குயின்ஸ்லாந்தில் வளர்ப்பு மகளை கொலை செய்த குற்றத்திற்காக சிறை தண்டனை எதிர்கொண்டுவந்த நபர், சிறைக்குள்ளேயே உயிரிழந்துள்ளார்.
2015 ஆம் ஆண்டிலேயே அவர் 12 வயது சிறுமியை இவ்வாறு கொலை செய்துள்ளார்.
துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி மூச்சு திணற வைத்தே கொன்றார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இக்குற்றத்துக்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. குயின்ஸ்லாந்து, பிரிஸ்பேனில் உள்ள சிறைச்சாலையில் உயிரிழக்கும்போது அவரது வயது 64 ஆகும். உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் விசாரணை நடக்கின்றது.