பிரிஸ்பேனில் மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து: ஒருவர் பலி: 10 பேர் காயம்!
பிரிஸ்பேன் வடக்கு புறநகர்ப் பகுதியிலுள்ள நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு 9.40 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த பெண் பயணித்த ஹோண்டா ஒடிஸி மற்றும் ஹ_ண்டாய் ஐமாக்ஸ் கார்கள் நிலையாக நின்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது, டொயோட்டா ஹையேஸ் வேன் பின்னால் இருந்து வாகனங்கள் மீது மோதியது. ஹோண்டா ஒடிஸி காரை ஓட்டி வந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தடயவியல் விபத்து பிரிவினால் இந்த விபத்து குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சபா.தயாபரன்.