நியூ சவூத் வேல்ஸிலுள்ள பண்ணையொன்றில் துப்பாக்கி தற்செயலாக வெடித்தில் 9 வயது சிறுவனொருவர் பலியாகியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை முற்பகல்வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டிருந்த சிறுவனுக்கு துணை வைத்தியர்கள் சிகிச்சையளித்தாலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
சம்பவம் தொடர்பில் 14 வயது சிறுவன் ஒருவரும் ,34 வயது இளைஞன் ஒருவனும் கைது செய்யப்பட்டனர்.
உரிய அனுமதியை பெறாது துப்பாக்கியை வைத்திருந்தார் என இளைஞன்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சிறுவன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் மே 16 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் மே 14 ஆம் திகதி கோல்பர்ன் உள்ளுர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.