பேர்த்தில் கடற்கரையோர பாருக்குள் நேற்றிரவு இடம்பெற்ற இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இரு பாதுகாப்பு ஊழியர்கள்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
39 வயது ஆண் மற்றும் 20 வயது பெண் ஆகியோருடன் இவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் ஆண்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அவரின் தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான காணொளியும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் பாதுகாப்பு ஊழியர் ஒருவர், நபரொருவரை தரையில் போட்டு தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் பாதுகாப்பு ஊழியர்கள் இருவரும் இன்று காலை பேர்த் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது.