அமெரிக்காவின் வர்த்தகப் போர்: ஆசியாமீது திரும்புகிறது ஆஸ்திரேலியாவின் பார்வை!
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுடனான வர்த்தக உறவு மேம்படுத்தப்பட்டுவருகின்றது என பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
அமெரிக்காவின் வர்த்தகப்போர் மற்றும் அதனால் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
' மூலோபாய போட்டிக்கு மத்தியில் நாம் வாழ்கின்றோம். சீனாவுடனான உறவு சீர்செய்யப்பட்டது. ஏனைய நாடுகளுடனான உறவும் வலுப்படுத்தப்பட்டுவருகின்றது." எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஆசியாவுடனான உறவையும் மீட்டெடுத்துள்ளோம். பசுபிக் நாடுகளுடனான உறவு சிறப்பாக உள்ளது. அது எமக்கு மிக முக்கியம். அதேபோல இந்தியாவுடனான உறவும் மேம்படுத்தப்படும்." என பிரதமர் அல்பானீஸி மேலும் குறிப்பிட்டார்.