நியூ சவுத் வேல்ஸின் மேற்கு பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் விமானி பலியாகியுள்ளார்.
இன்று காலை 7.15 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விமானத்தில் விமானி மட்டுமே சென்றுள்ளார் எனவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தின் உதவியுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.