தெற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் நிக் மெக்பிரைட் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மனைவியை தாக்கினார் என்ற குற்றத்துக்காகவே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தால் அவரின் அரசியல் எதிர்காலம் ஆட்ட காண தொடங்கியுள்ளது.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக தாக்குதல் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
2018 தேர்தலில் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவே மாநில நாடாளுமன்றத்தக்கு தெரிவானார். அதன்பின்னர் அவர் சுயாதீனமாக இயங்கினார்.
வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் மே மாதம், நாடாளுமன்ற உறுப்பினர் நிக் மெக்பிரைட் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.