சிட்னி, அம்பர்வேல் பகுதியில் வயோதிப பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வாகனமொன்றுக்குள் இருந்தே நேற்றிரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
65 வயது பெண் படுகாயமடைந்தார். அவருக்கு துணை மருத்துவர்கள் சிகிச்சையளித்தாலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
21 வயது யுவதி மற்றும் 34 வயது இளைஞன் ஆகியோரும் வீட்டில் இருந்துள்ளனர். அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
கொலையாளிகளை கைது செய்வதற்குரிய விசாரணை வேட்டையில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.