ஆஸ்திரேலியாவின் வடக்கு வாசலாகக் கருதப்படும் இந்தோனேசியாவின் தொலைதூர பகுதியான பப்புவா பிராந்தியத்தில் இராணுவ விமானங்களை நிலை நிறுத்தவதற்கு ரஷ்யா முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் ஆஸ்திரேலியா கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது.
அதிகாரிகள் மேலதிக தகவல்களை திரட்டிவருகின்றனர் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
' எமது பிராந்தியத்தில் ரஷ்யா செல்வாக்கு செலுத்த முற்படுவதை நாம் விரும்பவில்லை." எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
' ரஷ்ய ஜனாதிபதி சர்வதேச சட்டத்தை மீறிய சர்வாதிகாரியாவார். நாம் உக்ரைன் பக்கமே நிற்கின்றோம்.
அதேவேளை, இந்தோனிசியாவில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகமும் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் இந்தோனேசிய தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவித்தல் எதுவும் விடுக்கப்படவில்லை.