இந்தோனேசியாவின் பாதுகாப்பு அமைச்சருடன், ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் இன்று அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
தமது இராணுவ விமானங்களை இந்தோனேசியாவில் நிலைநிறுத்துவதற்கு ரஷ்யா முயற்சிப்பதாகவும், இது தொடர்பில் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ள சூழ்நிலையிலேயே மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தமது நாட்டிலுள்ள தளங்களில் ரஷ்ய விமானங்கள் நிலைநிறுத்தப்படமாட்டாது என இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்தார் என ரிச்சர்ட் மார்லஸ் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியாவின் டார்வினில் இருந்து 1300 கிலோ மீற்றர் தொலைவிலேயே ரஷ்ய விமானங்களை நிலைநிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக வெளியான செய்தியை இந்தோனேசியா நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.